21வது தங்கம் வென்ற ஃபெல்ப்ஸ்

21வது தங்கம் வென்ற ஃபெல்ப்ஸ்

2 mins read
0972792b-9dad-44a3-a52a-205fd70bc595
-

அமெரிக்காவின் நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் (படம்) தமது 21வது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 4x200 மீட்டர் ஏதேச்சை பாணி அஞ்சல் போட்டியில் அமெரிக்கக் குழு வெற்றி பெற்றது. இக்குழுவில் ஃபெல்ப்ஸ் இடம் பெற்றிருந்தார். இந்தப் போட்டியை அமெரிக்கா வெல்வது இதுவே 17வது முறையாகும். போட்டியை முடிக்க அமெ ரிக்கக் குழு ஏழு நிமிடங்கள் 0.66 வினாடிகள் எடுத்துக் கொண்டது. இரண்டாம் நிலையில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்ற பிரிட்டன் ஏழு நிமிடங்கள் 3.13 வினாடிகளில் போட்டியை முடித் தது. ஜப்பானிய குழு வெண் கலத்தைத் தட்டிச் சென்றது. அமெரிக்கக் குழுவில் இடம் பெற்றிருந்த ஃபெல்ப்ஸ், லோச்டோ ஆகியோர் இந்தப் போட்டியை நான்கு முறை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஆண்களுக்கான 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டி யில் பங்கெடுத்த ஃபெல்ப்ஸ் தமது 20வது தங்கத்தை வென்றார்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஒற்றையர் கலப்புப் பாணி போட்டியில் ஹங்கேரியின் கடின்கா ஹோஸ்சு வாகை சூடியுள்ளார். தங்கப் பதக்கம் வென்றது மட்டு மல்லாது புதிய ஒலிம்பிக் சாத னை நேரத்தையும் அவர் பதிவு செய் தார். போட்டியை அவர் இரண்டு நிமிடங்கள் 6.58 வினாடிகளில் முடித்தார். இந்தப் போட் டியில் வென்ற முதல் ஹங்கேரிய வீராங்கனை எனும் பெருமை 27 வயது ஹோஸ் சுவைச் சேரும். வெள்ளிப் பதக் கத்தை பிரிட் டனும் வெண் கலத்தை அமெ ரிக்காவும் வென் றன. பெண்க ளுக்கான 200 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் அமெரிக்கா வின் கேட்டி லெடெக்கி தங்கம் வென்றுள்ளார். அவருக்குக் கடுமையான போட்டியைத் தந்த சுவீடனின் சேரா ஷோஸ்டிரம் வெள்ளி வென்றார்.