ஆண்களுக்கான ஹாக்கி போட்டி யில் இந்திய அணி 2-1 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டி னாவைத் தோற்கடித்துள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அர்ஜெண்டினாவை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வென்றி ருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 'பி' பிரிவில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் அதன் முதல் ஆட்டத்தில் அயர்லாந்தைச் சந்தித்த இந்தியா 3=2 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. அதனைத் தொடர்ந்து இரண் டாவது ஆட்டத்தில் கடைசிக் கட்டத்தில் கோல் விட்டு 2=1 எனும் கோல் கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், அர்ஜெண்டி னாவுக்கு எதிரான ஆட்டத்தை எப்படியும் கைப்பற்றவேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
ஆட்டத்தின் 8வது நிமிடத் திலேயே இந்தியா கோல் போட்டது. சிங்லென்சனா சிங் போட்ட கோல் அர்ஜெண்டினாவை கதிகலங்க வைத்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா 35வது நிமிடத்தில் கோ தாஜீத் சிங் மூலம் இரண்டாவது கோலைப் போட்டது. முதல் மூன்று காற்பகுதிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டத்துக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் தவித்த அர்ஜெண்டினா, ஆட்டத்தின் இறுதிக் காற்பகுதியில் தாக்கு தலுக்கு மேல் தாக்குதல்களை நடத்தியது. ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கொன்சாலோ பைய்லாட் அர் ஜெண்டினாவுக்கு கோல் போட்டார். அதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவுக்கு நான்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அர்ஜெண்டினாவால் கடைசி வரை ஆட்டத் தைச் சமப்படுத்த முடியாமல் போனது. கோல் வலை நோக்கி அர்ஜெண்டினா அனுப்பிய பந்தை இந்திய அணியின் கோல்காப்பாளர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தியதே இதற்கு முக்கிய காரணம். அர்ஜெண்டினாவின் பல கோல் முயற்சிகளை ஸ்ரீஜேஷ் முறியடித்து வெற்றியை உறுதி செய்தார்.
அர்ஜெண்டினாவின் கோல் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் இந்திய கோல்காப்பாளர் ஸ்ரீஜேஷ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

