நீச்சல்: கைல் சாமர்ஸ் எதிர்பாராத வெற்றி

நீச்சல்: கைல் சாமர்ஸ் எதிர்பாராத வெற்றி

1 mins read
0493a4fe-313f-4396-bb16-e287000972a6
-

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பதின்ம வயது கைல் சாமர்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் வாகை சூடியுள்ளார். இந்த 18 வயது வீரர் இந்த தூரத்தை 47.58 விநாடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் பெல்ஜியத்தின் பியேட்டர் டிம்மர்ஸ் 47.80 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

மூன்றாவது நிலையில் முந் தைய வெற்றியாளரான நேதன் ஏட்ரியன் வந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் கேமரன் மெக்கிவோய் ஏழாம் இடத்தைப் பிடித்தார். மற்றொரு நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி 4 x 200 மீட்டர் எதேச்சை பாணி அஞ்சல் நீச்சல் போட்டியில் சக அமெரிக்க வீராங்கனைகளான அலிசன் ஷ்மித், லியா ஸ்மித், மெடலின் டிராடோ ஆகியோர் அடங்கிய குழுவுக்கு அச்சாணி யாக விளங்கி தங்கம் வெல்ல வைத்தார்.

ஆண்கள் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற கைல் சாமர்ஸ் தமது வெற்றியைக் கொண்டாடுகிறார். படம்: ஏஎஃப்பி