இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை

1 mins read
7d57f8ef-17cf-4eba-956a-039ef134e5ad
-

ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் (படம்) வரலாற்று சாதனை படைத்து உள்ளார். ஒலிம்பிக் நீச்சல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முதல் சிங்கப்பூர் ஆடவர் என்னும் சாதனையை வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் அவர் நிகழ்த்தி உள்ளார். சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை நடந்த அரை இறுதிப் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 50.83 வினாடிகளில் நீந்திக் கடந்து இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். மேலும், உலக வெற்றியாளர் போட்டியில் நிகழ்த்திய தமது சொந்த சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையையும் ஸ்கூலிங் ஏற்படுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த வெற்றி யாளர் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 50.96 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார் அவர். மேலும், நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை குவித்து வரும் அமெரிக்காவின் மைக்கல் ஃபெல்ப்ஸை தகுதிச் சுற்றில் பின் னுக்குத் தள்ளி ஸ்கூலிங் முன் னேறியதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் வென்று சிங் கப்பூருக்குப் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து ஸ்கூலிங் தெரி விக்கையில், உலக "சாதனையை முறியடிப்பதைப் பெரிதாகக் கருத வில்லை. வெள்ளி, வெண்கலம் வென்றால்கூட ஓர் இழப்பாகத் தான் கருதுவேன். தங்கப்பதக் கத்தை வெல்ல வேண்டும் என் பதில் குறியாக உள்ளேன். அரை இறுதியில் 51 வினாடிகளுக்குள் வர விரும்பினேன். இறுதியாக, நன்றாகச் செய்துள்ளேன்," என் றார்.