தோல்வியிலும் புதிய வரலாறு

தோல்வியிலும் புதிய வரலாறு

1 mins read
cdb3290f-8885-4a54-8771-8e5852fcb60b
-

ஒலிம்பிக்கில் தனது இறுதி தனிநபர் போட்டியில் வெற்றி பெறத் தவறினாலும் வரலாறு படைக்கத் தவறவில்லை மைக்கல் ஃபெல்ப்ஸ் (இடது). ஒலிம்பிக்கில் இதுவரை 22 தங்கம் உட்பட 27 பதக்கங்களை வென்றுள்ள அவர் 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலை 51.14 வினாடிகளில் முடித்தார். தென்னாப்பிரிக்காவின் சாட் டி குளோசும் ஹங்கேரியின் லாஸ்லோவும் அதே நேரத்தில் போட்டியை முடிக்க, அவர்கள் மூவருக்கும் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் நீச்சல் வரலாற்றில் இதுவரை இப்படி ஒரே பதக்கத்தை மூவர் பகிர்ந்து கொண்டதில்லை. இருவர் பகிர்ந்துகொண்ட சம்பவங்கள் உண்டு. "இந்த அனுபவம் மிகவும் புதிது, விசித்திரமானது," என்றார் ஃபெல்ப்ஸ்.