மேசைப்பந்து விளையாட்டில் சிங்கப்பூர் மகளிர் குழு காலிறுதியில் தென்கொரியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்றிரவு 9 மணிக்கு நடக்க இருக்கும் அரையிறுதியில் வலுவான சீனக் குழுவை எதிர்கொள்கிறது ஃபெங் டியன்வெய், யு மெங்யு, ஸே„வ் யிஹான் ஆகியோர் அடங்கிய சிங்கப்பூர் குழு.
உலகின் நான்காம் நிலை வீராங் கனையான ஃபெங் டியன்வெய், தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற செட் கணக்கில் சூ ஹியோ வொன்னை வீழ்த்தினார். மற்றோர் ஒற்றையர் ஆட்டத்தில் யிஹான் வாகை சூடினார். ஆயினும், யிஹான்- மெங்யு இணைப் பங்கேற்ற இரட்டையர் ஆட்டத்திலும் மெங்யு பங்கேற்ற ஒற்றையர் ஆட்டத் திலும் சிங்கப்பூருக்குத் தோல்வி கிட்டியது.
இதனால், 2-2 என்று சமநிலை ஆனது. இந்த நிலையில், அரை இறுதிக்குச் செல்வது யார் என்பதைத் தீர்மானிக்கும் கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, சிங்கப்பூர்க் குழுவை அரையிறுதிக்கு முன்னேற்றினார் ஃபெங். சிங்கப்பூர்க் குழு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கிலும் 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் தென்கொரியாவை வீழ்த்தியிருந்தது. அந்தப் போட்டிகளில் முறையே சிங்கப்பூர்க் குழு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

