ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தன்னை வீழ்த்த யாருமில்லை என்பதை ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை நடந்த பந்தயத்தில் 9.81 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கம் வென்றார் அவர். பந்தயத்தின் கிட்டத்தட்ட பாதி நேரம்வரை தம்மை முந்திச் சென்று கொண்டு இருந்த அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை கடைசி நாற்பது மீட்டர் தூரத்தில் பின் னுக்குத் தள்ளினார் உசைன். 9.89 வினாடிகள் ஓடிய காட் லின் வெள்ளிப் பதக்கமும் 9.91 வினாடிகள் ஓடிய கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் வெண்கப் பதக்கமும் பெற்றனர். முதலாவதாக வந்து வென்றதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் உசேன். பார்வையாளர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது. தமது ரசிகர்கள் சிலருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர், மின்னல் வீரர் என்பதைக் குறிக்கும் பாவனை ஒன்றை வழக்கம்போல் செய்து காட்டினார்.
தாம் வென்றது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய உசைன், "அது ஒரு பிரமாதமான அனுபவம். நான் மிகவும் வேகமாக ஓட வில்லை. இருப்பினும் வென்றது பெரிய மகிழ்ச்சி. நான் சாதிப்பேன் என ஏற்கெனவே தெரிவித்துள் ளேன்," என்றார். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத் தில் தங்கம் வென்றதன் மூலம் 120 ஆண்டு ஒலிம்பிக் ஓட்டப் பந் தயத்தின் தன்னிகரில்லா வீரராக அவர் மிளிர்கிறார். எந்தவொரு ஆணோ பெண்ணோ இதுவரை தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதில்லை. அதை உசைன் சாதித்துக் காட்டியிருக் கிறார்.
மூன்று முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்த மகிழ்ச்சியில் உசைன் போல்ட். படம்: ஏஎஃப்பி

