'அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்'

'அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்'

1 mins read
7dc63593-078f-4b30-b21d-ba213c1ed90c
-

தென்னாப்­பி­ரிக்­கா­வின் வெய்ட் வான் நீகெர்க் ஆண்­களுக்­கான 400 மீட்டர் ஓட்­டப்­பந்த­யத்­தில் தங்கம் வென்­றுள்­ளார். 17 ஆண்­டு­க­ளாக நிலைத்­தி­ருந்த மைக்கேல் ஜான்­ச­னின் ஒலிம்பிக் சாதனையை முறி­ய­டித்து 400 மீட்டர் தூரத்தை 43.03 வினா­டி­களில் கடந்து புதிய சாதனை­யும் படைத்­துள்­ளார் நீகெர்க். 1999ஆம் ஆண்டு நடை­பெற்ற ஒலிம்­பிக் போட்­டி­யில் மைக்கேல் ஜான்சன் 400 மீட்டர் தூரத்தை 43.18 வினா­டி­களில் ஓடிக் கடந்ததே முன்னைய சாதனை­யாக இருந்தது. நேற்று முன்­தி­னம் ரியோ­வில் நடை­பெற்ற 400 மீட்டர் ஓட்­டப்­பந்த­யத்­தில் கிரெ­ன­டாவைச் சேர்ந்த கிரானி ஜேம்ஸ் வெள்ளிப் பதக்­கத்தை­யும் அமெ­ரிக்­கா­வின் லாஷான் மெர்ரிட் வெண்­க­லப் பதக்­கத்தை­யும் வென்ற­னர்.

"இது முடியும் என்று நம்­பி­னேன். இன்றைய இரவு எனக்­குச் சாத­க­மாக அமைந்தது," என்று 24 வயது நீகெர்க் கூறினார். மொத்தம் 8 பேர் பங்­கேற்ற இறுதிப் போட்­டி­யில் ஆக வெளிப்­பு­றத் தடமான 8வது தடத்­தில் ஓடிய வான் நீகெர்க்­குக்கு சக போட்­டி­யா­ளர்­கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்ப­தற்­கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. "எந்தத் தடகள வீரரும் ஆக வெளிப்­பு­றத்­தில் உள்ள எட்­டா­வது தடத்­தில் இருக்க விரும்ப­மாட்­டார்­. அதிலும் சில நன்மை­களும் உள்ளன," என்றும் நீகெர்க் கூறினார்.