கேமரா விழுந்து 7 பேர் காயம்

கேமரா விழுந்து 7 பேர் காயம்

1 mins read
d2eb945e-b898-4eb7-83f4-d9c2557f28a6
-

ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் அந்தரத்தில் தொங் கிக் கொண்டிருந்த தொங்கு புகைப் படக்கருவி ஒன்று விழுந்து இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். ஏற்கெனவே ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ள தாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொங்கு புகைப்படக் கருவிகள் மூலம் விளையாட்டுப் போட்டிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலை- யில் பிரேசில் நாட்டுத் தொலைக் காட்சி செய்தியில், சம்பவத்தில் பெண் ஒருவருக்கு முகத்தில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் மருத்துவ உதவியாளர்களின் உதவியுடன் தள்ளுவண்டியில் அமர்த்தி வெளியில் கொண்டு செல்லப் பட்டதாகவும் கூறப்பட்டது. மொத்தம் 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அந்தச் செய்தி கூறியது.