ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரேசிலில் கழி ஊன்றித் தாண்டும் போட்டி யில் உள்ளூர் பிரபலமான தியாகோ ட சில்வா உலக சாதனை படைத்த பிரஞ்சு வீரரான ரெனாட் லவிலெனியைத் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். 22 வயதான தியாகோ, 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கு அடுத்த நிலையில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்ற பிரஞ்சு வீரர் ரெனாட் 5.97 மீட்டர் உயரம் தாண்டினார்.
"தங்கமா, என்னால் நம்பவே முடியவில்லை," என்ற ட சில்வா, "6 மீட்டர் உயரத்தைத் தாண்டியது இதுவே முதல் தடவை. "நான் பிறந்து வளர்ந்த ஊர் மக்கள் நான் வெல்ல வேண்டும் என்று விரும்பினர். "ரசிகர் கூட்டம் என்னை நோக்கி அளவுக்கு அதிகமாக கூச்சலிட்டுக்கொண்டிருந்தது.

