நெதர்லாந்துக்குப் பாடம் புகட்டிய பெல்ஜியம்

நெதர்லாந்துக்குப் பாடம் புகட்டிய பெல்ஜியம்

1 mins read

ஹாக்கி விளையாட்டில் உலகின் முன்னணிக் குழுக்களில் ஒன் றாகத் திகழும் நெதர்லாந்து குழுவுக்கு 3=1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியை அளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம். ஜெரோம் ட்ரூயன்ஸ், ஃபுளோ ரென்ட் வேன் அபெல், ஜான் டோமென் ஆகியோர் அடித்த கோல்களால் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியது. தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் அந்த அணி அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது.

"இது வரலாற்றுப்பூர்வமான இரவு. நெதர்லாந்துக்கு எதிரான இந்த வெற்றி அற்புதமானது. அதிகாரபூர்வ போட்டி ஒன்றில் இதற்குமுன் அந்த அணியை நாங்கள் வென்றதில்லை என நினைக்கிறேன்," என்று சொன் னார் டோமென். முன்னதாக நடந்த அரை இறுதியில் நடப்பு வெற்றியாளரான ஜெர்மனியை 5=2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த் தியது. பிரிவு ஆட்டத்தில் அர்ஜெண் டினா 1=2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியிடம் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.