பிரேசிலின் கனவைச் சிதறடித்த ஜெர்மனி

பிரேசிலின் கனவைச் சிதறடித்த ஜெர்மனி

1 mins read
0a2abcec-f5af-4a40-979d-1eaba37bd685
-

பீச் வாலிபால் விளையாட்டில் உலக வெற்றியாளர்களான பிரேசிலின் பார்பரா சைக்ஸாஸ்- அகதா பெட்னார்ஸுக் இணைக்கு அதிர்ச்சி தோல்வியளித்து தங்கத்தை வென்றது ஜெர்மனியின் லாரா லுட்விக் (இடது) - கிரா வால்கென்ஹார்ஸ்ட் இணை. 21-18, 21-14 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீராங்கனையர் வாகை சூடினர். முன்னதாக, வெண்கலத்திற்கான போட்டியிலும் அமெரிக்காவிடம் பிரேசில் தோற்றுப் போனது. 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பீச் வாலிபால் விளையாட்டு புகுத்தப்பட்டது முதல் இது வரை 12 பதக்கங்களை பிரேசில் கைப்பற்றியுள்ளது. மகளிர் பிரிவில் தங்கக் கனவு பறிபோனபோதும் இன்று காலை நடக்கவுள்ள ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பிரேசிலின் புரூனோ ஸ்கிமிடிட்அ - லிசன் செருட்டி இணை தங்கம் வெல்லும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்