இறுதியாக, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுவிட்டது. தமது நாட்டைப் பதக்கப் பட்டியலில் இடம்பெறச் செய்த பெருமைக்குச் சொந்தக் காரர் ஹரியானா மாநிலம், ரோஹ் தக்கைச் சேர்ந்த 23 வயது மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக். பெண்களுக்கான 58 கிலோ எதேச்சைபாணிப் பிரிவில் கிர்கிஸ் தானின் ஐசுலூ டைனிபெகோ வாவை 8=5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, வெற்றி மேடையை அலங்கரித்தார் சாக்ஷி. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளை யாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் இவர் படைத்தார்.
முன்னதாக, காலிறுதியில் தோற்றபோதும் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ரஷ்ய வீராங்கனை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால் ரெபிசேஜ் சுற்றில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இடம்பெறும் வாய்ப்பு பெற்றார் சாக்ஷி. இந்தப் போட்டியில் தொடக்கத் தில் தடுமாறியதால் 0-5 எனப் பின்தங்கிய சாக்ஷி, பின்னர் வீறுகொண்டு எழுந்தார். போட்டி முடிய வினாடிகளே இருந்தபோது இவர் தமது உச்ச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வெற்றியைத் தன் வசப்படுத்தினார். "கடந்த 12 ஆண்டுகளாக இரவு பகலாக நான் பட்ட கஷ்டங் களுக்கான பலனே இது," என்றார் சாக்ஷி. அத்துடன், மல்யுத்தத்தில் இந்தியாவிற்காகப் பதக்கம் வெல்லும் முதல் பெண்ணாக தான் வருவேன் என்று கனவிலும் நினைக்க வில்லை என்ற இவர், இந்திய மல்யுத்த வீரர்கள் சிலர் இன்னும் போட்டியில் இருப்பதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இன் னும் கூடும் என்று திடமாக நம்புகிறார்.
தமது 12 ஆண்டுகாலப் பயிற்சிக்கும் உழைப்பிற்கும் தக்க பலன் கிடைத்துவிட்டதை எண்ணி மகிழும் சாக்ஷியைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் அவரது பயிற்றுவிப்பாளர். படம்: ராய்ட்டர்ஸ்

