ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் அர்ஜெண்டினா முதல்முறையாக தங்கம் வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர் கொண்ட அர்ஜெண்டினா அதிரடி யாக விளையாடி 4=2 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல்பாதியில் 10 நிமிடங்களில் அர்ஜெண்டினா கோல் மழை பொழிந்ததே அதன் வெற்றிக்குக் காரணம். முதல்முறையாக ஒலிம்பிக் ஹாக்கியின் இறுதி ஆட்டத்தில் களமிறங்கிய பெல்ஜியம் ஆட்டத் தின் மூன்றாவது நிமிடத்திலேயே கோல் போட்டு முன்னிலை வகித்தது.
ஆனால் துவண்டுவிடாமல் ஆடிய அர்ஜெண்டினா அடுத் தடுத்து மூன்று கோல்களைப் போட்டு பெல்ஜியத்தை அதிர்ச்சி யில் உறைய வைத்தது. சுதாரித்துக் கொண்ட பெல்ஜியம் கோல் இடை வெளியைக் குறைக்க முயன்றது. விட்டுக்கொடுக்காமல் ஆடிய பெல்ஜியம் வீரர்களுக்குக் கை மேல் பலன் கிடைத்தது. பெல்ஜியத்தின் கௌதியே பொக்கார்ட் அர்ஜெண்டினாவின் மூன்று தற்காப்பு ஆட்டக்காரர் களைக் கடந்து சென்று பந்தை வலைக்குள் சேர்த்தார். அதனைத் தொடர்ந்து ஆட்டத் தைச் சமன் செய்ய பெல்ஜியம் முழுமூச்சுடன் இறங்கியது. தாக்குதலில் பெல்ஜியம் முழு கவனம் செலுத்தியதைத் தங்க ளுக்குச் சாதகமாகப் பயன்படுத் திக்கொண்ட அர்ஜெண்டினா வீரர்கள் நான்காவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தனர். வெண்கலத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி வாகை சூடியது. இந்த ஆட்டத்தில் ஹாலந்தை சந்தித்த ஜெர்மனி கடும் போட்டிக்குப் பிறகு 'ஷுட்அவுட்' முறைப்படி வென்றது.
கோல் போட்ட மகிழ்ச்சியை பெல்ஜியத்தின் கோல் கம்பத்துக்குள் அமர்ந்து கொண்டாடும் அர்ஜெண்டினா வீரர்கள். கோல் விட்டு தங்கம் இழந்த ஏமாற்றத்துடன் சோகமே உருவாக பெல்ஜியம் ஆட்டக்காரர் (இடது). படம்: ஏஎஃப்பி

