போல்ட் மீண்டும் தங்கம்

போல்ட் மீண்டும் தங்கம்

1 mins read
b341a1f7-865a-48cb-968a-45e0bc16e5a3
-

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் நட்சத்திர வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றுள்ளார். இது ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் அவர் வென்றிருக்கும் இரண்டாவது தங்கப் பதக்கமாகும். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் மின்னிய போல்ட் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் எட்டு தங்கப் பதக்கங் களை வென்றுள்ளார்.

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் போல்ட் தங்கம் வென்றபோதிலும் அவரால் தாம் முன்பு பதிவு செய்திருந்த உலக சாதனை நேரத்தை முறியடிக்க முடியாமல் போனது. 2009ஆம் ஆண்டில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற உலகத் திடல்தடப் போட்டியில் 19.19 வினாடிகளில் போல்ட் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை முடித்து தங்கம் வென்றிருந்தார். ஆனால் இம்முறை அப்பந்தயத்தை முடிக்க அவர் 19.78 வினாடிகள் எடுத்துக் கொண்டார். இருப்பினும், அவரை விட வேறு யாரும் வேகமாக ஓடவில்லை.

20.02 வினாடிகளில் பந்தயத்தை முடித்த கனடாவின் ஆண்ட்ரே டி கிரேசே இரண்டாவது இடத்தில் வந்து வெள்ளிப் பதக்கத்தைத் தமக்குச் சொந்த மாக்கிக் கொண்டார். பிரான்சின் கிறிஸ்டோஃப் லெமைட்ரே வெண்கலம் வென்றார்.

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றதை அடுத்து தமக்கே உரிய பாணியில் கொண்டாடும் உசேன் போல்ட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்