ஒலிம்பிக் காற்பந்துப் போட்டியில் நெய்மார் போட்ட கோலால் பிரேசில் அணி முதல் முறையாக தங்கம் வென்று உள்ளது. ரியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியும் ஜெர்மனி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட் டி யின் 26வது நிமி- டத் தில் பிரேசில் வீரர் நெய்மார் முதல் கோலடித்து அசத் தி னார். பதில் கோல் அடிக்க போராடிய ஜெர்மனி அணி இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்தது.
ஆட்ட நேர முடிவில் இரு அணி களும் 1-1 என சமநிலையில் இருந்த தால் கூடுதல் நேரம் வழங்கப் பட் டது. அப்போதும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பெனால்டி முறை நடத்தப்பட்டது. இதில் பிரேசில் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் ப தக் கத்தை வென்றது. இதற்கு முன் 1984, 1988, 2012ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் இறுதிப் போட்டிகளில் பதக்கத்தைக் கோட்டைவிட்ட பிரேசில் அணி, இம்முறை சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளது. 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் அரை இறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் படுதோல்வி அடைந்தது குறிப் பிடத்தக்கது.
பிரேசிலின் நெய்மார் உதைத்த பந்து ஜெர்மனி கோல் காப்பாளரைத் தாண்டி வலைக்குள் புகுந்ததைக் கொண்டாடும் பிரேசில் வீரர் ரோட்ரிக்கோ கெயோ (மஞ்சள் சட்டை). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

