கோல்ஃப் மூலம் நிதிதிரட்டு

கோல்ஃப் மூலம் நிதிதிரட்டு

1 mins read

சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை இம்மாதம் 26ஆம் தேதியன்று ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் கோல்ஃப் மூலம் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. திரட்டப்படும் நிதி வசதி குறைந்த இந்திய மாணவர்களின் கல்விச் செலவுக்குப் பயன் படுத்தப்படும். கடந்த ஆண்டு 284 மாணவர்களுக்கு உயர்க் கல்விக் கான உதவித் தொகை, கல்விக் கடன், உபகாரச்சம்பளங்கள் ஆகியவற்றை வழங்கி அறக் கட்டளை உதவியது. உள்ளூர் கல்விக் கழகங்களில் முழுநேர மாணவராகப் பயில்பவர்களுக்கு அறக்கட்டளை உதவித் தொகை வழங்குகிறது.

உள்ளூர் மற்றும் தனியார் கல்விக் கழகங்களில் முழுநேரம் அல்லது பகுதிநேர மாணவர் களாகப் பயில்பவர்களுக்குக் கல்விக் கடனும் உபகாரச் சம்பளங்களும் வழங்கப்படு கின்றன. அறக்கட்டளையால் இதுவரை நடத்தப்பட்டுள்ள கோல்ஃப் போட்டிகள் வாயிலாக 292,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 70,393 வெள்ளி திரட்டப்பட்டது. இவ்வாண்டுக்கான கோல்ஃப் போட்டி 'சிஸ்டம் 36' முறைப்படி நடத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கெடுக்க விரும்புவோர் 280 வெள்ளி செலுத்தவேண்டும். "கோல்ஃப் மூலம் இந்த நிதி திரட்டும் முயற்சி சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் மூலம் திரட்டப்படும் தொகை வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக ஓர் ஆண்டில் எங்களால் திரட்டப்படும் தொகை யில் கிட்டத்தட்ட பாதியாகும்.2016-08-23 06:00:00 +0800