இங்கிலாந்திடம் வீழ்ந்த பாகிஸ்தான்

இங்கிலாந்திடம் வீழ்ந்த பாகிஸ்தான்

1 mins read

சௌத்ஹேம்டன்: இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு கிறது. தொடரின் முதல் நாள் ஆட்டம் மழை யினால் பாதியில் கைவிடப்பட்டது. எனவே, டக்வொர்த் லுவிஸ் முறைப்படி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கி லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தானின் அசார் அலி 110 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்தார். சர்ஃபராஸ் அகமதும் அரைசதம் அடித்ததால் அவ்வணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர் விளையாட தொடங்கிய இங்கிலாந்து அணியின் ரூட், ரோய் இருவரும் அரைசதம் அடித்தனர். ரோய், ருட் இருவரும் ஆட்டமிழந்த போதும் ஸ்டோக்சுடன் இணைந்த மோர்கன் சிறப்பாக விளையாடினர்.

இங்கிலாந்து 34 ஓவரில் 3 விக்கெட்டு கள் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் எடுத்து இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே, டக்வொர்த் லுவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. எதிரணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த கிடைத்த வாய்ப்புகளை பாகிஸ் தான் அணியினர் தவறவிட்டதுதான் அவர் களது தோல்விக்குக் காரணம் என்று கூறப் படுகிறது.