நியூ ஹேவன்: கனெடிகட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளனர் சானியா=மோனிகா இணை. இந்தியாவின் சானியா மிர்சாவும் ருமேனியாவின் மோனிகா நிகுலேஷுவும் 7=5, 6=4 என்ற செட் கணக்கில் உக்ரேனின் கதர்யேனா=தைவானின் சுவாங் சீ=ஜங் இணையை வென்று கிண்ணத்தை கைப்பற்றினர். கடந்த 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் விளையாடிய இந்த இணை, இப்போது கிண் ணத்தைக் கைப்பற்றியுள்ளது. இன்று முதல் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடவுள்ள சானியாவுக்கு இந்த வெற்றி ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று கருதுகிறார்கள் ரசிகர்கள்.
சானியா-மோனிகா இணை வெற்றி
1 mins read
-

