ஃபுளோரிடா: முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் போராடி தோற்றது இந்தியா. இந்திய அணியின் இந்த தோல்விக்கு காரணம் கடைசி பந்தை தான் சரியாக விளையாட ததுதான் என்று ஒப்புக்கொண்டு உள்ளார் டோனி. கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அதை எதிர்கொண்ட டோனியை ஆட்ட மிழக்கச் செய்தார் பிராவோ. கடைசி ஓவரை வீசிய பிராவோ, "டோனி என்ன செய்வார் என்பது தெரியும். எனவே, கடைசி பந்தை மெதுவாக வீச முடிவு செய் தேன். அதற்குப் பலன் கிடைத்தது," என்றார்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய டோனி, "ஆட்டம் அபாரமாக இருந்தது. கடைசி பந்தை எப்படி விளையாட வேண்டும் என்று நினைத்தேனோ, அப்படி அந்த பந்தை நான் அடிக்கவில்லை," என்றார் டோனி. "ஆயினும் இன்றைய ஆட்டத் தில் பல நல்ல அம்சங்கள் இருந் தன. ஒரு ஓவருக்கு 12 ஓட்டங்கள் வீதம் எடுத்தோம். "பந்தடிப்பாளர்கள் சிறப்பாக விளையாடினர். ஏனென்றால் 250 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை துரத்துவது என்பது எளிதல்ல. குறிப்பாக, ராகுல் சிறப்பாக பந்து அடித்தார். வெற்றி பெற்று இருந் தால் நன்றாக இருந்து இருக்கும்," என்றார் டோனி.

