சோல்: தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய நீர்சறுக்குப் போட்டியை 18 வயது சிங்கப்பூரரான மார்க் லியோங் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் லியோங் பட்டம் வென்றிருப்பது இதுவே முதல்முறை. கடுமையான போட்டி கொடுத்த தென் கொரியாவின் ஜியோங் ஜி மின், சோ பியோம் கியூன் ஆகியோரைப் புள்ளிக் கணக்கு அடிப்படையில் பின்னுக்குத் தள்ளி பட்டத்தைக் கைப்பற்றினார் லியோங். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஆங்கிலோ சீனப் பள்ளியைச் சேர்ந்த லியோங் நீர்சறுக்குப் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்சறுக்குப் போட்டி: சிங்கப்பூரர் வெற்றி
1 mins read

