புதுடெல்லி: ரியோ டி ஜெனி ரோவில் அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தி யாவின் பூப்பந்து வீராங்கனை பி.வி. சிந்துவை அந்நாட்டின் மத்திய ரிசர்வ் போலிஸ் படை அதன் தளபதியாகவும் தூதராகவும் பதவி வழங்கி சிறப்பிக்க இருக்கிறது.
இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் தளபதி என்பது போலிஸ் படையின் கண்காணிப்பாளர் பதவிக்குச் சமமாகும். தளபதியின்கீழ் 1,000 வீரர்கள் பணிபுரிவார்கள். தளபதி மற்றும் தூதர் பதவி யைப் பெற சிந்து இணங்கியுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது. அதிகாரபூர்வ சடங்கில் படை யின் சீருடை அணிந்து பதவிகளை சிந்து பெற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக் காரர் சிந்து. இவருக்கு இந்திய அரசு விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
இந்த விருதை அவர் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியிட மிருந்து இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற அதிகாரபூர்வ சடங்கில் பெற்றுக்கொண்டார். ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்தியா வுக்காக வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கும் சீருடற் பயிற்சிப் பிரிவில் போட்டியிட்ட அபாரத் திறமையைக் காட்டிய தீபா கர்மக்கருக்கும் ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப் பட்டது.
ராஜீவ் கேல் ரத்னா விருதை இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பி.வி. சிந்து. படம் இணையம்

