இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுடன் நியூசிலாந்து அணி தற்பொழுது டெஸ்ட் போட்டிகளில் விளை யாடி வருகின்றது. இப்போட்டி கள் நிறைவடைந்ததும் நியூசிலாந்து அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22 ஆம் தேதி கான்பூரில் தொடங்கும். மற்ற இரு டெஸ்ட் போட்டிகளும் கோல்கத்தா, இந்தூரில் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் 5 ஒருநாள் போட்டிகள் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் முறையே தர்மசாலா, டெல்லி, மொகாலி, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

