பிரிமியர் லீக் குழுக்களின் கடைசி நேர மாற்றங்கள்

பிரிமியர் லீக் குழுக்களின் கடைசி நேர மாற்றங்கள்

1 mins read

காற்பந்து விளையாட்டாளர்களை வாங்க கடைசி நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி மட்டும் இங்கிலாந்தின் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்கள் மொத்தம் 155 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் செலவழித்துள்ளதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. அத்துடன், காற்பந்து வீரர்களை வாங்க, விற்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்த ஆகஸ்ட் மாத பருவத்தில் மொத்தம் 1.165 பில்லியன் பவுண்டுகளுக்கு விளை யாட்டாளர்களை வாங்க செலவிடப்பட்டுள்ள தாகவும் அந்த செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

இதில் 13 பிரிமியர் லீக் குழுக்கள் தாங்கள் இதுவரை செலவிட்ட தொகையை விட அதிகமாக செலவிட்டு விளை யாட்டு வீரர்களை வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரிமியர் லீக்கில் உள்ள 20 குழுக்களும் தொலைக்காட்சியில் ஆட்டங்களை ஒளிபரப்பு வது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் பயனடைந்துள்ளதாக அறியப்படுகிறது. "2016=2017ஆம் ஆண்டு காற்பந்து பருவத்தில் ஒளிபரப் பப்படும் ஆட்டங்களுக்காக குழுக் களுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் வருமானமே அவற்றின் இந்த செலவின அதிகரிப்புக்கு முக்கிய காரணம்," என்று நிதி ஆய்வாளரான டேன் ஜோன்ஸ் விளக்கமளித்தார்.