மனாமா: சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழு பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றபின் தொடர்ந்து மூன்றாவது தோல்வியைச் சந்தித் துள்ளபோதும் குழு தோற்றவிதம் வி.சுந்தரமூர்த்திக்குக் கவலை அளிப்பதாக இல்லை. பஹ்ரேனுக்கு எதிராக நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த நட்பு முறை ஆட்டத்தில் வழக்கம்போல சுந்தரத்தின் சிங்கப்பூர்க் குழு தற்காப்பில் பலம் காட்டியது. சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய பஹ்ரேன் வீரர்கள் ஆட்டம் முழுவதும் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத் திருந்தபோதும் அவர்களால் சிங்கப்பூர் தற்காப்பு அரணைத் தகர்த்து முன்னேற முடியவில்லை. ஆயினும், அதிர்ஷ்டம் அவர் கள் பக்கமே இருந்தது. ஆட்டத் தின் 11வது, 50வது, 89வது நிமி டங்களில் பஹ்ரேனுக்கு மூன்று பெனால்டி வாய்ப்புகள் கிட்ட, அம் மூன்றும் கோலாக மாறி சிங்கப் பூரின் வெற்றிக் கனவைக் கலைத் தன. சிங்கப்பூருக்காக ஆட்டத் தின் 37வது நிமிடத்தில் ஒரே ஒரு கோலை அடித்தார் சஃபுவான் பகருடின்.
பைஹாக்கி கைசான், மது மோகனா ஆகியோர் தவறிழைத்த தால் பஹ்ரேனுக்கு வழங்கப்பட்ட முதலாவது, மூன்றாவது பெனால்டி வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூர் கவலைப்படவில்லை. ஆயினும், சர்ச்சைக்குரிய வகையில் பஹ்ரே னுக்கு இரண்டாவது பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டதால் சிங்கப் பூர் ஆட்டக்காரர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். வரும் நவம்பரில் ஆசிய காற் பந்து சம்மேளனத்தின் சுசுகி கிண்ணம் நடக்கவிருக்கும் நிலையில் சுந்தரத்தின் சோதனை முயற் சிகள் தொடர்கின்றன. இஸ்வான் மஹ்பூட்டுக்குப் பதிலாக கோல்காப்பாளராக ஹசன் சன்னியைக் களம் இறக்கிய அவர், ஷாகிர் ஹம்சா, ஜுமாத் ஜன்டான் ஆகிய இருவரை யும் பக்கவாட்டிலும் பைஹாக்கி, டேனியல் பென்னட் ஆகியோரை மத்தியப் பகுதியிலும் நிறுத்தி தற்காப்பு வரிசையையும் மாற்றியமைத் தார். அவரது இந்த புதிய தற்காப்பு அணுகுமுறை நல்ல பலனளித்த போதும் நடுவரின் முடிவுகள் சிங்கப் பூர் வீரர்களைத் துவளச் செய்தன.

