யோகேஷ்வரை எட்டிப் பார்க்கும் தங்க வாய்ப்பு

யோகேஷ்வரை எட்டிப் பார்க்கும் தங்க வாய்ப்பு

1 mins read
350e06a6-83ce-4973-841a-de48ad3ca5a7
-

புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத்துக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இவர் 60 கிலோ பிரிவில் வெண் கலம் வென்றார். இதற்கிடையே, அப்போட்டியில் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் பெசிக் குடுக்கோவ் ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து யோகேஷ்வர் தத்தின் வெண்கலப் பதக்கம் வெள்ளிப் பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டது. பெசிக் குடுக்கோவ் 2013ஆம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யோகேஷ்வர் தத்துக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ பிரிவில் அசர்பைஜான் மல்யுத்த வீரர் டோக்ருல் அஸ்கரோவ் தங்கம் வென்றார். அவர் குடுக்கோவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். தங்கம் வென்ற அஸ்கரோவ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது தங்கப் பதக்கம் பறிக்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. தங்கம் வென்ற அஸ்கரோவ் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளதால் யோகேஷ்வர் தத்துக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

2012ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் யோகேஷ்வர் வென்ற வெண்கலம் வெள்ளியாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்