அகுவேரோவுக்கு 3 ஆட்டங்கள் தடை

அகுவேரோவுக்கு 3 ஆட்டங்கள் தடை

1 mins read
a9ebad9d-9592-4ca4-8b63-b863474b19f8
-

லண்டன்: அண்மையில் வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின்போது வன்முறையைக் கையாண்டதற் காக மான்செஸ்டர் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோவுக்கு மூன்று ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் ஹேம் தற்காப்பாளர் வின்ஸ்டன் ரீட்டின் கழுத்தைக் குறிவைத்து தமது முழங்கையைப் பயன்படுத்தி தாக்கியதற்காக அகுவேரோவுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

அகுவேரோவின் இந்தத் தப்பாட்டத்தை நடுவர் கவனிக்க தவறினார். ஆனால் அகுவேரோ செய்த தவறு காணொளியில் தெள்ளத் தெளிவாகப் பதிவானது. அதை ஆதாரமாகக் கொண்டு இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் அகுவேரோவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. அகுவேரோவுக்கு விதிக்கப் பட்ட இந்தத் தண்டனையால் வரும் சனிக்கிழமையன்று மான் செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் அவர் களமிறங்க முடியாது. அதனைத் தொடர்ந்து போர்ன் மத்துக்கும் சுவான்சீக்கும் எதிராக நடைபெறும் ஆட்டங்களிலும் அகுவேரோ விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடை காரணமாக சிட்டியின் செர்ஜியோ அகுவேரோவுக்கு மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்