நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியில் உலகின் நான்காவது நிலை வீரரும் இரண்டு முறை வெற்றியாளருமான ஸ்பெயினின் ரஃபயேல் நடாலை நான்காவது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த லுகஸ் புயி தோற்கடித்து போட்டியிலிருந்து வெளியேற்றி உள்ளார். 6-1, 2-6, 6-4, 3-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் போராடி நடாலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் புயி. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலை வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் 6-3, 7-5 என்ற கணக்கில் சுவிட்டோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் வரிசையில் இருக்கும் சானியா மிர்சா மற்றும் குரோவேஷியாவைச் சேர்ந்த இவான் டோடிக் ஜோடி இரண்டாவது சுற்றில் நேற்று விளையாடியது. இதில் இந்த ஜோடி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. செக் குடியரசின் பார்பரா = மரின் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
நடாலைத் தோற்கடித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறிய புயி. படம்: ஏஎஃப்பி

