மலேசிய சூப்பர் லீக்கில் போட்டியிடும் பாகாங் குழுவின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்பது குறித்து ஃபாண்டி அகமது பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. பாகாங் அவருக்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து அவர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் முடிவு எடுக்கவேண்டும். 1991ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை பாகாங் குழுவுக்காக ஃபாண்டி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் இளம் ஆட்டக்காரர்களுக்காகத் தாம் வகுத்திருக்கும் நீண்டகாலத் திட்டங்களை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் ஆதரித்தால் இங்கேயே இருக்க அவர் விரும்புவதாக நம்பப்படுகிறது. தற்போது ஃபாண்டி சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்திக்கு உதவி வருகிறார். ஃபாண்டியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள காற்பந்துச் சங்கம் நாளை கூட்டம் நடத்துகிறது.
பாகாங் செல்ல ஃபாண்டி பரிசீலனை
1 mins read

