முதல் ஆட்டத்தில் கொசோவோ சமநிலை

முதல் ஆட்டத்தில் கொசோவோ சமநிலை

1 mins read

துர்க்கு: முதல் அனைத்துலகக் காற்பந்து ஆட்டத்தில் களமிறங்கிய கொசோவோ அதில் சமநிலை கண்டு வரலாறு படைத்துள்ளது. ஃபின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 எனும் கோல் கணக்கில் கொசோவோ சமநிலை கண்டது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் சொந்த மண்ணில் விளையாடிய ஃபின்லாந்து கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் கொசோவோவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கொசோவோவின் வலோன் பெரிஷா கோல் போட்டார்.