ஒலிம்பிக் போட்டிகளின்போது தன்னிடம் தூப்பாக்கி முனையில் வழிப்பறி நடந்தாக நாடகமாடிய நீச்சல் வீரர் ரயன் லோசட்டிற்கு (படம்) 10 மாதம் தடை விதிக்கப் பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக வெற்றியாளர் போட்டியிலும் லோசட் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகை செய்தி தெரிவிக் கிறது. 12 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள லோசட்டின் இந்த செயலால் அவர் பல 'ஸ்பான்சர்கள்' எனும் ஆதரவாளர்களை இழந்து உள்ளார். இவருடன் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றிய மற்ற மூவருக்கும் 4 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று நான்கு வீரர் களும் மதுபோதையில் இருந்த போது பெட்ரோல் நிலையத்தைச் சூறையாடினர். எனவே, அங்கு ஏற்பட்ட சேதத்திற்கு பணம் செலுத்திவிட்டு வெளியேறிய அவர்கள் வழிப்பறி செய்யப் பட்டதாகக் பொய் கூறியுள்ளார். தனது செயலுக்கு மன்னிப்பு கோரிய லோசட், "இதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள் கிறேன். இதைப் பெரிதுபடுத்தாமல் இருந்திருந்தால், இப்போது இவ் வளவு பெரிய பிரச்சினை ஆகி யிருக்காது," என்றார்.

