நியூயார்க்: அமெரிக்கப் பொது டென்னிஸ் போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் தர டென்னிஸ் வீராங்கனையாக மகுடம் சூடியுள்ளார் ஏஞ்சலிக் கெர்பர் (படம்). பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அரை இறுதியில் முதல் தர வீராங்கனை யாக இருந்த செரீனா வில்லியம்ஸை (அமெரிக்கா) வீழ்த்திய 11ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் பட்டம் வென்றவரும், புதிய முதல் தர வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியதுமே கெர்பர் கையே ஓங்கியது, தனது அனுபவ ஆட்டம் மூலம் கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். கெர்பருக்கு இரண்டாவது செட்டில் பிளிஸ்கோவா 'செக்' வைத்தார். டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸை வீழ்த்திய பிளிஸ்கோவா இரண்டாவது செட்டில், கெர்பருக்குச் சவாலாக விளங்கினார். கெர்பரும் போராடினார். இறுதியில் கெர்பர் செட்டை 6-4 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.

