பலோடெலி: லிவர்பூல் குழுவில் சேர்ந்ததே ஆகப் பெரிய தவறு

பலோடெலி: லிவர்பூல் குழுவில் சேர்ந்ததே ஆகப் பெரிய தவறு

1 mins read
4822d531-f210-4173-bc63-4d77a06e7bfd
-

நீஸ்: இத்தாலிய காற்பந்து வீரர் மாரியோ பலோடெலி, 26 (படம்), பிரபல இங்கிலிஷ் குழுவான லிவர்பூலுடன் இணைந்ததே வாழ்நாளில் தான் எடுத்த ஆக மோசமான முடிவு என்று கூறியிருக்கிறார். இப்போது பிரான்சின் நீஸ் குழுவிற்காக விளையாடி வரும் பலோடெலி, தமது அறிமுக ஆட்டத்திலேயே இரண்டு கோல் களைப் போட்டு அசத்தினார்.

அந்த ஆட்டத்திற்கு முன்ன தாகச் செய்தியாளர்களிடம் பேசிய இவர், "லிவர்பூல் ரசிகர்கள் அற்புதமானவர்கள். அக்குழுவின் சில வீரர்களுடன் எனக்கு நல்ல நட்புறவு இருந்தது. மற்ற எல்லா விஷயங்களிலும் அந்தக் குழுவை நான் துளியும் விரும்பவில்லை," என்று சொன்னார். 2015ல் லிவர்பூல் நிர்வாகி பதவியிலிருந்து துரத்தப்பட்ட பிரெண்டன் ரோஜர்ஸ்தான் பலோ டெலியை அக்குழுவிற்காக ஒப்பந் தம் செய்தார். "ரோஜர்ஸ், க்ளோப் என இரு நிர்வாகிகளின்கீழ் விளை யாடியபோதும் அவர்களின் அணுகு முறை எனக்கு ஒத்துப் போக வில்லை," என்ற இவர், லிவர்பூல் சார்பில் 28 ஆட்டங்களில் ஆடி நான்கு கோல்களை அடித்துள்ளார்.