நியூயார்க்: 2014 ஆஸ்திரேலிய ஓப்பன், 2015 பிரெஞ்சு ஓப்பன், இந்த ஆண்டில் அமெரிக்க ஓப்பன் என மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிக்கு முன்னே றிய சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ் லஸ் வாவ்ரிங்கா, 31, அம்மூன்று முறையும் உலகின் முதல்நிலை ஆட்டக்காரர்களைத் தோற்கடித்து பட்டம் வென்று சாதித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நடந்த அமெரிக்க ஓப்பன் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் களில் வீழ்த்தினார் வாவ்ரிங்கா.
இதன்மூலம், கடந்த 46 ஆண்டுகளில் அமெரிக்க ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றிய ஆக வயதானவர் என்ற பெருமையும் அவரைச் சென்றடைந்தது. அத்துடன், 2002ல் பீட் சாம்ப் ராஸ் அமெரிக்க ஓப்பன் வெற்றி யாளராக வாகை சூடிய பிறகு அந்தப் பட்டத்தை வென்ற 30 வயதைத் தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் தனதாக் கிக்கொண்டார் வாவ்ரிங்கா. கடுமையான போராட்டத் திற்குப் பிறகு முதல் செட்டைக் கைப்பற்றினார் ஜோகோவிச். அதன்பின் சுதாரித்துக்கொண் டார் வாவ்ரிங்கா. இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்து இரு செட் களைக் கைப்பற்றிய அவர், நான்காவது செட்டிலும் தமது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். தொடர்ந்து புள்ளிகளை இழந்ததால் விரக்தி அடைந்த ஜோகோவிச் ஒரு கட்டத்தில் தமது மட்டையைத் தரையில் ஓங்கி அடித்ததால் நடுவரின் எச்சரிக்கைக்கு ஆளானார்.
முதன்முறையாக அமெரிக்க ஓப்பன் வெற்றியாளராக உருவெடுத்த மகிழ்ச்சியில் கிண்ணத்தை முத்தமிடும் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா. படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போர்ட்ஸ்

