பாராலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இலவச விமானப் பயணம்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இலவச விமானப் பயணம்

2 mins read
ff307493-e260-4783-99c7-394c8dfe38d2
-

மலிவுக் கட்டண விமான சேவை நிறுவனமான ஏர்ஏ‌ஷியா, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஆசியான் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் தங் களது விமானங்களில் வாழ்நாள் முழுக்க இலவசப் பயணம் செய் யலாம் என்று அறிவித்துள்ளது. பாராலிம்பிக் போட்டிகளில் சாதித்த தென்கிழக்காசியாவின் உடற்குறையுள்ள விளையாட்டா ளர்களை வெகுவாகப் பாராட்டி னார் ஏர்ஏ‌ஷியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ். "ஒலிம்பிக் போட்டிகள் அற்புத மாக இருந்ததாக நினைத்திருந் தேன். ஆனால், மனஉறுதி என்றால் என்னவென்பதை பாரா லிம்பிக் போட்டிகள் வெளிக்காட்டி இருக்கின்றன," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு டோனி ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் இலவசப் பயணச் சலுகை வழங்கும் ஏர்ஏ‌ஷியா, வெள்ளி வென்றவர்கள் ஐந்து ஆண்டுகளும் வெண்கலம் கைப் பற்றியவர்கள் மூன்று ஆண்டு களும் தனது விமானங்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் சார்பில் இதுவரை யிப் பின் சியூ 100 மீ. மல்லாந்து நீச்சல் எஸ்2 பிரிவில் தங்கமும் 100 மீ. நெஞ்சு நீச்சல் எஸ்பி4 பிரிவில் திரேசா கோ வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். நடப்பு பாராலிம்பிக் போட்டி களில் மலேசியாவும் தாய்லாந்தும் தலா மூன்று தங்கங்களை வென் றுள்ளன. வியட்னாம் ஒரு தங்கத் தைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டி களில் தங்கம் வென்றவர்களுக் கும் இதே போன்று வாழ்நாள் இலவசப் பயணம் வழங்குவதாக ஏர்ஏ‌ஷியா அறிவித்திருந்தது.

சிங்கப்பூருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் அமெரிக்கா வின் டெக்சஸ் பல்கலைக் கழகத்தில் மாணவ விளையாட்டாளராக இருப்பதால் அவரால் ஏர்ஏ‌ஷியா வழங்கும் சலுகையை ஏற்க இயலாமல் போனது. இதையடுத்து, அவருக்குப் பதி லாக அவருடைய பெற்றோருக்கு 2018ஆம் ஆண்டு வரை இலவச விமானப் பயணச் சலுகை அளிக்க ஏர்ஏ‌ஷியா முன்வந்த தாகக் கூறப்படுகிறது. பாராலிம்பிக் போட்டிகள் வரும் 18ஆம் தேதி வரை நடைபெறவிருப் பதால் இன்னும் பல ஆசியான் வீரர்கள் பதக்கம் வெல்வர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.