ஒலிம்பிக் வெற்றி நேரத்தையே முறியடித்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பாராலிம்பிக் வீரர்கள்

ஒலிம்பிக் வெற்றி நேரத்தையே முறியடித்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பாராலிம்பிக் வீரர்கள்

1 mins read
9c86375e-3864-4d60-bb52-c96fef704ebd
-

ரியோ டி ஜெனிரோ: அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் மேத்யூ சென்ட் ரோவிட்ஸ் ஜூனியர் அப்போட் டியை முடிக்க மூன்று நிமிடங்கள் 50 வினாடிகள் எடுத்துக் கொண் டார். இந்நிலையில், கடந்த ஞாயிற் றுக்கிழமையன்று பாராலிம்பிக் போட்டியின் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய கண் பார்வை பாதிக்கப்பட்ட நால்வர் இந்நேரத்தை முறியடித்துள்ளனர். இவர்களில் அல்ஜீரியாவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குவர். போட்டியை மூன்று நிமிடங்கள் 48.29 வினாடிகளில் முடித்து தங்கம் வென்றது மட்டுமல்லாது புதிய உலகச் சாதனை நேரத் தையும் படைத்தார் அல்ஜீரியாவின் அப்துலாத்தீஃப் பாக்கா. எதியோப்பியாவின் தமிரு டிமிசி மூன்று நிமிடங்கள் 48.49 வினாடிகளில் பந்தயத்தை முடித்து வெள்ளி வென்றார். கென்யாவின் ஹென்ரி கிர்வா மூன்று நிமிடங்கள் 49.59 வினாடிகளில் பந்தயத்தை முடித்து வெண்கலம் வென்றார்.

தங்கம் வென்ற அப்துலாத் தீஃபின் சகோதரர் ஃபஹாட், மூன்று நிமிடங்கள் 49.84 வினாடிகளில் பந்தயத்தை முடித்து நான்காவது இடத்தில் வந்தார். பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் நூலிழையில் தவறவிட்டார்.

வேகமாக ஓடி ஒலிம்பிக் நேரத்தையும் முறியடித்து பாராலிம்பிக் போட்டிக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை முடித்த அல்ஜீரியாவின் அப்துல்லாதீஃப் பாக்கா (நடுவில்) தங்கம் வென்றார். எதியோப்பியாவின் தமிரு டெமிசி (இடது) இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றார். இந்தப் போட்டியில் கண்பார்வை பாதிக்கப்பட்ட நான்கு பேர் ஒலிம்பிக் வெற்றி நேரத்தை முறியடித்தனர். படம்: ராய்ட்டஸ்