பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்

2 mins read
87b31514-0fb0-4db5-8e24-6f14794002ea
-

ரியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு நேற்று இரண்டாவது தங்கம் கிடைத்தது. ஈட்டி எறிதலில் ராஜஸ்தானைச் சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்து உள்ளன. உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில் நேற்றுக் காலை நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் F46 பிரிவில் ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து முதலாவதாக வந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வென்றிருக்கும் இரண்டாவது பாராலிம்பிக் தங்கம் இது. ஏதென் ஸில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டியில் 62.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கத்தைக் கைப்பற்றிய ஜஜாரியா நேற்று 63.97 மீட்டர் எறிந்து தமது சொந்த சாதனையை முறியடித்தார். பாராலிம்பிக் போட்டியில் இரு முறை தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

35 வயதான ஜஜாரியா ராஜஸ் தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந் தவர். அவர் தமது ஒன்பதாவது வயதில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்த கம்பி ஒன்றைத் தொட்டதன் காரணமாக உடலில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட் டது. அதன் விளைவாக அவர் தமது இடது கையை இழக்க நேர்ந்தது. ஒரு கை ஊனமுற்றபோதிலும் பெற்றோரின் ஆதரவுடன் விளை யாட்டுப் போட்டிகளில் ஜஜாரியா ஈடுபட்டு வந்தார். ஈட்டி எறிதலில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த அவர் 2002ஆம் ஆண்டு மாநில அளவில் அதற்கான போட்டியில் தேர்வானார். அதனைத் தொடர்ந்து ஏதென்ஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். மாரியப்பன், ஜஜாரியா ஆகி யோரின் தங்கப் பதக்கங்கள் தவிர உயரம் தாண்டுதலில் உத் தரப் பிரதேசத்தின் வருண் சிங் வெண்கலமும் குண்டு எறிதல் போட்டியில் ஹரியானாவின் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். பாராலிம்பிக் போட்டி ஒன்றில் பதக்கம் பெறும் முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை தீபா மாலிக் பெற்றார்.

63.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தமது சொந்த சாதனையை முறியடித்த தேவேந்திர ஜஜாரியா. படம்: ராய்ட்டர்ஸ்