யுஏஃபாவின் புதிய தலைவராக செஃபரின் தேர்வு

யுஏஃபாவின் புதிய தலைவராக செஃபரின் தேர்வு

1 mins read
654376a8-a5de-4f7a-9fd7-21a76bbd26d8
-

ஸுரிக்: ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனத்தின் (யுஏஃபா) புதிய தலைவராக அலெக்சாண்டர் செஃபரின் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு செஃபரின் சிலோவேனியக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவருக்கான தேர்தலில் ஹாலந்தைச் சேர்ந்த மைக்கல் வேன் பிராக் என்பவரை 48 வயது திரு செஃபரின் தோற்கடித்தார். யுஏஃபாவின் தலைவராக இதற்கு முன்பு பதவி வகித்த மிஷல் பிளாட்டினிக்கு நெறிமுறை மீறல் காரணமாக நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் பதவி விலகினார்.