அரையிறுதிக்குக் குறி வைக்கும் தெம்பனிஸ் அணி

அரையிறுதிக்குக் குறி வைக்கும் தெம்பனிஸ் அணி

1 mins read

ஆசியக் காற்பந்து சம்மேளனக் கிண்ணப் போட்டியின் அரை இறுதிக்கு முதல்முறையாகத் தகுதி பெற்று வரலாறு படைக்க சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு குறி வைத்துள்ளது. இன்று மாலை ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் நடை பெறும் காலிறுதிச் சுற்றுக்கான இரண்டாவது ஆட்டத்தில் இந்தி யாவின் பெங்களூரு அணியை தெம்பனிஸ் சந்திக்கிறது. பெங்களூருவுக்கு எதிரான காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் தெம்பனிஸ் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. அதனால் அரையிறுதிக்கு முன்னேற தெம்பனிஸ் இன்றைய ஆட்டத்தில் கைப்பற்றினால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த கோல் அடிப் படையிலும் அது பெங்களூரு அணியை முறியடிக்கவேண்டும். முதல் ஆட்டத்தில் தெம்பனிஸ் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. பெங்க ளூரின் நிர்வாகி ஏஷ்லி வெஸ்ட்வூட்டும் சில முக்கிய ஆட்டக்காரர்களும் அக்குழுவை விட்டுச் சென்றதை அடுத்து அது வெற்றி பெறுவது சிரமம் என்று கருதப்பட்டது. ஆனால் சொந்த மண்ணில் விளையாடிய பெங்க ளூரு வெற்றி பெற்றது.