அண்மையில் ரியோ டி ஜெனி ரோவில் நடைபெற்ற உடற்குறை உள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) சிங்கப் பூரைப் பிரதிநிதித்து பெருமை சேர்த்த வீரர்களுக்கு வரும் சனிக்கிழமையன்று வெற்றி ஊர்வலம் நடத்தப்படுகிறது. 57 ஆங்கர்வேல் சாலையில் அமைந்துள்ள ஆக்டிவ்எஸ்ஜி செங்காங் விளையாட்டு மையத் திலிருந்து வீரர்கள் கார்களில் அழைத்துச் செல்லப்படுவர். விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தில் வெற்றி ஊர்வலக் கார்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும். அதன்பிறகு வெற்றி ஊர்வலம் விவோசிட்டிக்குத் தொடரும். பாராலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த சிங்கப்பூர் வீரர்களில் பெரும்பாலோர் இன்று அதிகாலை சுமார் 5.35 மணிக்கு நாடு திரும்புவர் என்று தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் மல்லாந்து நீச்சலில் தங்கம் வென்ற யிப் பின் சியூவுக்கும் (இடது) 100 மீட்டர் நெஞ்சு நீச்சலில் வெண்கலம் வென்ற திரேசா கோவுக்கும் (வலது) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒரு மில்லியன் மைல் கிறிஸ் ஃபிளையர் புள்ளிகள் வழங்கி சிறப்பித்துள்ளது.
பாராலிம்பிக் வெற்றி ஊர்வலம்
1 mins read
-

