தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூருக்கு அதிர்ச்சி தந்த பெங்களூரு

1 mins read

ஜோகூர் பாரு: ஆசியக் காற்பந்துச் சம்மேளனக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்கான முதல் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் ஜோகூர் டாருல் தக்சிம் அணியுடன் பெங்களூரு அணி 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளது. ஜோகூரின் லார்க்கின் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் இடைவேளையின்போது கோல் ஏதுமின்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ஜோகூர் கோல் போட்டு முன்னிலை வகித்தது. இருப்பினும், அடுத்த நான்கு நிமிடங்களில் பெங்களூரு ஆட்டத்தைச் சமன் செய்தது. அரையிறுதிக்கான இரண்டாவது ஆட்டம் அடுத்த மாதம் 19ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும்.