மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபாண்டி மகன் அறிமுகமாகக்கூடும்

மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபாண்டி மகன் அறிமுகமாகக்கூடும்

1 mins read
Google News Preferred Icon

மலேசியாவுக்கு எதிராக அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெறும் 'காஸ்வே சேலஞ்' போட்டியில் சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரம் ஃபாண்டி அகமதின் மகனான இர்ஃபான் ஃபாண்டி முதல்முறையாக சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவுக்காகக் களமிறங்கக்கூடும். அவ்வாறு நடந்தால் அதுவே அவரது முதல் மூத்தநிலை அனைத்துலக ஆட்டமாகும். மலேசியாவுக்கும் ஹாங்காங்குக்கும் இடையிலான நட்புமுறை ஆட்டங்களில் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தியின் குழுவில் இர்ஃபான் இடம்பெறுவார் என்று நம்பப்படுகிறது. அடுத்த மாதம் 7ஆம் தேதி மலேசியாவுக்கு எதிரான ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.2016-09-30 06:00:00 +0800