காற்பந்து உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று: முதலிடத்தில் ஜெர்மனி

காற்பந்து உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று: முதலிடத்தில் ஜெர்மனி

1 mins read
c3ad547e-1906-4c8c-a35d-b212d76c6dbf
-

ஹம்பர்க்: உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று காற்பந்து ஆட்டம் ஒன்றில் செக் குடியரசுடன் மோதிய ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சொந்த மண்னில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி ஆறு புள்ளிகளுடன் 'C' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

ஜெர்மனியின் தாமஸ் முல்லர் இரண்டு கோல்களையும் டோனி குரூஸ் ஒரு கோலையும் போட்டு வெற்றித் தேடித் தந்தனர். மத்திய திடல் ஆட்டக்காரர் களான மேட் ஹம்மல்ஸ், ஜெரோம் போத்தெங் ஆகிய இருவரும் செக் குடியரசின் தாக்குதல் ஆட்டத்தை முறியடித் தனர்.

ஆட்டம் தொடங்கிய 13ஆம் நிமிடத்திலேயே, மாற்று ஆட்டக் காரராக களமிறங்கிய கோய்ட்ஷ் கடத்திய பந்தை முல்லர் கோலாக்கினார். முதல் பாதி ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி ஜெர்மனி எளிதில் செக் குடியரசை வீழ்த்தியது. 49வது நிமிடத்தில் டோனி குரூசும் 65வது நிமிடத்தில் மீண்டும் முல்லரும் கோல் போட, ஜெர்மனியின் வெற்றி உறுதி யானது.

இங்கிலாந்துக்காக இரண்டு கோல்களை அடித்த தாமஸ் முல்லரும் செக் குடியரசின் தோமஸ் ஹோரவாவும் பந்துக்காக போராடுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்