கோஹ்லி: திறனை நம்புகிறோம்

கோஹ்லி: திறனை நம்புகிறோம்

2 mins read
fff39614-7369-4c39-b843-afcd716b11cd
-

­­­இந்­திய கிரிக்­கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்­ப­ஜன் சிங் டுவீட்­டிற்கு கோஹ்லி ஆவே­ச­மாக பதில் அளித்­துள்­ளார். இந்தியா-நியூ­சி­லாந்து அணி கள் மோதிய டெஸ்ட் தொடர் முழு­வ­துமே இந்திய வீரர் அஸ்­வி­னின் செயல்­பாடு வெற்­றிக்­குப் பெரிதும் உதவி­யாக இருந்தது. இது குறித்து ஹர்­ப­ஜன் சிங் பதிவு செய்த டுவீட்­டில், "கடந்த 4 ஆண்­டு­க­ளா­கவே இந்திய ஆடு­க­ளங்கள் சுழற்­பந்து வீச்­சுக்கு ஏற்ற வகையில் உள்ளது. "நாங்கள் இருந்த தருணங் களில் இது­போன்ற ஆடு­க­ளங் கள் இருந்­தி­ருந்தால் நானும் கும்ப­ளே­வும் அதிக விக்­கெட்­டு­களைக் கைப்­பற்றி இருப்­போம்," எனக் கூறி­யி­ருந்தார். நியூ­சி­லாந்து டெஸ்ட் தொடரைக் கைப்­பற்­றிய இந்தியா, அனைத்­து­லக டெஸ்ட் கிரிக்­கெட் போட்டி தர­வ­ரிசை­யில் முதல் இடத்தைப் பிடித்­தது.

இதற்­கான கிண்­ணத்தைப் பெற்­றுக்­கொண்ட கோஹ்லி, ஹர்­ப­ஜன் சிங்கின் கேள்­விக்கு பதி­ல­ளித்­தார். "சுழற்­பந்து வீச்­சுக்­குச் சாத­க­மான ஆடு­க­ள­மாக இருந்தா­லும் பந்­து­வீச்­சா­ளர்­கள் எவ்­வ­ளவு வேகமாக பந்தைச் சுழலச் செய்­கின்ற­னர் என்றும் பின்னர் அது தரையில் பட்டு எப்படி திரும்­பு­கிறது என்பதுமே முக்­கி­யம். "கடந்த உலகக் கிண்ணப் டி20 போட்­டி­யில் நியூ­சி­லாந்­துக்கு எதிராக நாம் தோல்வி அடைந்­தோம். அப்போது நியூ­சி­லாந்து சுழற்­பந்து வீச்­சா­ளர்­கள் தர­மா­ன­வர்­கள் என்று கூறப்­பட்­டது. "அதே சுழற்­பந்து வீச்­சா­ளர்­கள்­தான் தற்­போ­தும் விளை­யா­டி­னர். ஏன் அவர்­க­ளால் விக்­கெட்­டு­களை வீழ்த்த முடி­ய­வில்லை, "எங்களுடைய திறமையை நாங்கள் நம்­பு­கி­றோம். எங்களுக்கு ஒரு­தலை­பட்­ச­மாக சாத­க­மா­கும் சூழ்­நிலை­களை உரு­வாக்கி ஆட வேண்டிய அவ­சி­யம் இல்லை," என்று விராத் கோஹ்லி கூறி­யுள் ­ளார்.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தற்கான கிண்ணத்தை கோஹ்லியும் பந்துவீச்சாளர் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்த அஸ்வினும் பெற்றுக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி