ஷங்ஹாய்: உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சீனாவில் நடந்து வரும் ஷங்ஹாய் மாஸ்டர்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஸ்பெயின் நாட்டின் ரொபர்ட்டோ பாடிஸ்ட்டா அகட் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் 12 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான ஜோகோவிச்சைத் தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் பந்தைத் திருப்பி அனுப்பும்போது 29 தவறுகளைச் செய்தார் ஜோகோவிச். இதற்குமுன் ஐந்து முறை ஜோகோவிச்சிடம் தோற்றிருந்தபோதும் துணிச்சலுடன் போராடி அவரை வென்ற அகட், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஆண்டி மரே அல்லது பிரான்சின் கில்லெஸ் சிமோனை எதிர்த்தாடுவார்.
அரையிறுதியில் வீழ்ந்தார் ஜோகோவிச்
1 mins read

