தொடர்ந்து வெல்ல இந்தியா முனைப்பு

தொடர்ந்து வெல்ல இந்தியா முனைப்பு

2 mins read

புதுடெல்லி: இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையி லான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெறு கிறது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அதைத் தொடர்ந்து தர்மசாலாவில் நடை பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரையும் கைப்பற்றும் இலக்குடன் இருக்கும் இந்திய அணி, இரண் டாவது ஒருநாள் போட்டியையும் வெல்ல முனைப்புடன் உள்ளது. தர்மசாலா போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றிக்குப் பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது. ஹர்த்திக் பாண்ட்யா அறிமுக ஆட்டத்திலேயே மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

சுழற்பந்துவீச்சில் அசத்திய அமித் மிஸ்ரா நியூசிலாந்து பந்தடிப்பாளர்களைத் திக்குமுக் காட வைத்தார். பந்தடிப்பில் விராத் கோஹ்லி சிறப்பாகச் செயல்பட்டார். முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி எடுத்த 85 ஒட்டங்கள் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. ரகானே, ரோகித் சர்மா, அணித் தலைவர் டோனி ஆகியோரும் வெளுத்துக் கட்டினர். காய்ச்சல் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளை யாடாத சுரேஷ் ரெய்னா இன்றைய போட்டியிலும் இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் ஜொலித்த 11 பேர் கொண்ட இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. இந்நிலையில், இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வந்துள்ள நியூசிலாந்து, இன்றைய ஆட்டத்தைக் கைப் பற்றும் முனைப்புடன் உள்ளது. அணித் தலைவர் வில்லியம் சன், டெய்லர் ஆகியோர் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் அந்த அணியின் பந்தடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.