சிட்டகாங்: இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் அலெஸ்டர் கூக் புதிய சாதனை படைத் துள்ளார். இங்கிலாந்து- பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் போட்டி சிட்டகாங்கில் இன்று தொடங்கு கிறது. இது கூக் களமிறங்கும் 134வது டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட்டில் விளையாடு வதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கி லாந்து வீரர் எனும் பெருமையைக் கூக் பெறுகிறார்.
அலெக் ஸ்டூவர்ட் 1990- 2003ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்த தே அதிகபட்சமாக இருந்தது. இதை கூக் கடந்த ஆகஸ்ட் மாதம் சமன் செய்தார். 31 வயது கூக் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாக்பூரில் நடந்த டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

