கவுகாத்தி: இந்தியக் காற்பந்து லீக் போட்டியின் பட்டியலில் சென்னையின் எஃப்.சி. மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கவுகாத்தி குழுவுடன் சென்னையின் எப்.சி. மோதியது. இதில் சென்னை அணி 1=0 எனும் கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் சென்னை வீரர் டேவிர் சுச்சி கோல் போட்டார். கடைசி வரை கவுகாத்தி அணியால் பதிலடி கொடுக்கமுடியாமல் போனது. இது சென்னை அணியின் இரண்டாவது வெற்றியாகும்.
பட்டியலில் முன்னேறிய சென்னை
1 mins read

