விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன: புலம்பும் டோனி

விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன: புலம்பும் டோனி

1 mins read

புதுடெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியா சத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் விக்கெட் டுகள் மளமளவெனச் சாய்ந்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று இந்திய அணித் தலைவர் டோனி தெரிவித்துள்ளார். "நான் பந்தடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த விரும் பினேன். ஆனால் மறுமுனையில் எங்களது விக்கெட்டுகள் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்டதால் அது சாத்தியமில்லாமல் போனது.

யாராவது ஓர் இந்திய வீரர் கூடுதலாக 15 நிமிடங்களுக்குக் களத்தில் இருந்திருந்தால் நாங் கள் வெற்றி பெற்றிருக்கலாம்," என்று டோனி மிகுந்த ஏமாற்றத் துடன் கூறினார். முதலில் பந்தடித்த நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் சதத்தால் 242 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்தத் தோல்வியின் விளைவால் ஒருநாள் தொடர் 1=1 என்று சமநிலையில் உள்ளது.