இந்திய காற்பந்து லீக் ஆட்டத்தில் மும்பையை 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து தனது முதல் வெற்றியை கோவா பதிவு செய்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு குழுக்களும் கோல் வேட்டையில் இறங்கின. 41வது நிமிடத்தில் கோவா அணி கோல் போட்டது. கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி கோவாவின் வீரர் சீசர் மும்பையின் பெனால்டி எல்லைக்குள் பந்தை அனுப்ப, சக வீரர் ரிச்சர்லிசன் கோல் போட்டார். பிற்பாதியில் மும்பை அணி ஆட்டத்தைச் சமன் செய்ய கடுமையாகப் போராடியது. ஆனால் கோவாவின் தற்காப்பு அரணை அதனால் முறியடிக்க முடியாமல் போனது. மேலும் சில கோல்களைப் போட தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை கோவா அணி நூலிழையில் நழுவவிட்டது. ஐந்தாவது லீக் ஆட்டத்தில் விளையாடிய கோவா அணி ஓர் ஆட்டத்தில் சமநிலையும் மூன்று ஆட்டங்களில் தோல்வியும் கண்டு இருந்தது.
முதல் வெற்றியைப் பதிவு செய்த கோவா அணி
1 mins read
-

